மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணத்தால், குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தருவியில் குளிக்க தடை! - சுற்றுலாப் பயணிகள்
திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் தொடர் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
![ஐந்தருவியில் குளிக்க தடை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4190148-thumbnail-3x2-kutralam.jpg)
courtalam
இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவியில் குளிக்க, காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். வெகு நாட்களாக தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்த குற்றாலத்தில் சமீபத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.