திருநெல்வேலி மாவட்டம், திம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன். இவர், தமது சொத்து பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். பெயர் மாற்றம் முடிந்ததும், அந்தப் பணிக்காக கண்காணிப்பாளர் சண்முகம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டு்ள்ளார்.
லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அலுவலர் அதிரடி கைது! - லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அலுவலர் கைது
திருநெல்வேலி: சொத்து பெயர் மாற்றம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அலுவலரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சண்முகநாதன்
லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத கந்தன், இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினரின் அறிவுறுத்தல் பேரில் கந்தன் இன்று (ஆகஸ்ட்.18) 5 ஆயிரம் லஞ்ச பணத்தை சண்முகத்திடம் வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும், களவுமாக சண்முகத்தை கைது செய்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.