கரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதரவற்று சாலையோரங்களில் இருப்பவர்கள், உணவு கிடைக்காமல் இருப்பவர்களை பாதுகாப்பான இடத்தில் ஒன்று சேர்த்து உணவு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டனர்.
முதியோர் இல்ல ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர், நெல்லை நகர் முழுவதும் சென்று சாலையில் ஆதரவற்று இருந்தவர்கள், வெளியூர் செல்ல முடியாதவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை நெல்லை டவுன் கல்லணை மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.