தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் ஊரடங்கு - வைரலாகும் வில்லிசைப்பாடல்! - வைரலாகும் வில்லிசைப்பாடல்

மத்திய அரசு அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் பின்பற்றும்படி சங்கரன்கோவில் அருகே வில்லிசை பாடல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

awareness-song
awareness-song

By

Published : Mar 21, 2020, 8:05 PM IST

Updated : Mar 21, 2020, 8:40 PM IST

கரோனா குறித்து அச்சம் வேண்டாம், விழிப்போடு பொதுமக்கள் இருக்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அரசுடன் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு அழகுநாச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் வில்லிசை குழுவின் சார்பாக கரோனா அச்சுறுத்தல் தொடர்பாக விழிப்புணர்வு வில்லிசைப் பாடல்களை பாடி வருகின்றனர்.

மக்கள் ஊரடங்கு விழிப்புணர்வு பாடல்!
நாளை மத்திய அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மக்கள் ஊரடங்கை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், இதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டும் எனவும், அவர்களே பாடல் வரிகளை எழுதி இசையமைத்துள்ளனர்.

தற்போது அந்தப்பாடல் சமூக வலைதளங்களில் பரவி, சுற்றுவட்டாரப்பகுதிகளில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:கரோனா வைரசிலிருந்து தற்காத்துக்கொள்ள அறிவுரை வழங்கிய சத்யராஜ் மகள்

Last Updated : Mar 21, 2020, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details