கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டதோடு கோயில் கும்பாபிஷேகங்கள் மற்றும் திருவிழாக்களையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தென் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயமான நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இருப்பினும் திருவிழா நாள்களில் கொடியேற்றம் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இல்லாமல் சுவாமி சன்னதியில் அமைந்திருக்கும் உற்சவர் மண்டபத்தில் வைத்து காலை மாலை இரண்டு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகங்களும் மகா தீபாராதனையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கோயில் முன்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.