திருநெல்வேலி மாவட்டம் முருகன் குறிச்சிப் பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல தனியார் வங்கி மேலாளர் ஒருவருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக கரோனா அறிகுறியுடன் காணப்பட்ட அவருக்கு நேற்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் முடிவில் இன்று அவருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.