கரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு தளர்வுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் மாநில, மாவட்ட எல்லைக்குள் பல்வேறு சோதனைக்குப் பின்னரே வாகனங்களை அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில், மாலத்தீவில் இருந்து கடற்படை கப்பல் மூலமாக, கொச்சி வந்தவர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டனர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேர் அரசு விரைவுப் பேருந்து மூலம் தமிழ்நாடு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதில், தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நெல்லை சித்த மருத்துவக் கல்லூரியில், அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கரோனா பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறையினர் இந்தச் சோதனையில் யாருக்காவது கரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவர்களுக்கு உரிய மருத்துவம் செய்ய நெல்லை அரசு மருத்துவமனையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொற்று இல்லாதவர்கள் சோதனைக்குப்பின்னர், அவர்கள் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:வடமாநிலத் தொழிலாளர்கள் 90 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு!