தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா விழிப்புணர்வு வாகன சேவையை தொடக்கி வைத்த ஆட்சியர்! - நெல்லையில் கரோனா விழிப்புணர்வு வாகனம்

திருநெல்வேலி: கரோனா விழிப்புணர்வு பரப்புரை வாகன சேவையை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

கரோனா விழிப்புணர்வு வாகன சேவை
கரோனா விழிப்புணர்வு வாகன சேவை

By

Published : Jun 16, 2020, 3:30 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் கரோனோ விழிப்புணர்வு பரப்புரை வாகன சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் மூலமாக திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டை, மானூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் களக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டவுள்ளது.

கரோனா விழிப்புணர்வு வாகன சேவை தொடக்கம்!

இந்த விழிப்புணர்வு பரப்புரையில் வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய அறிகுறிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், தகுந்த இடைவெளி கடைபிடிப்பது குறித்து பாடல்கள் மூலமாகவும், துண்டுபிரசுரங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த விழிப்புணர்வு பரப்புரை வாகன சேவையை இன்று (ஜூன் 16) மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் வைரஸ் உருவம் பொறித்த உடை அணிந்து நடனமாடினர்.

இதையும் படிங்க:கரோனா பரவலுக்கு ஒன்றிணைவோம் வா திட்டம் தான் காரணம் - ராஜேந்திர பாலாஜி!

ABOUT THE AUTHOR

...view details