தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் வரையப்பட்ட கரோனா விழிப்புணர்வு ஓவியம்! - Corona Awarness drawing in Tirunelveli

திருநெல்வேலி: மாநகரில் கரோனா வைரஸ் பரவும் சூழலில் மக்கள் சாலைகளுக்கு வரவேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையில் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.

கரோனா விழிப்புணர்விற்காக சாலையில் வரையப்பட்ட ஓவியம்!
கரோனா விழிப்புணர்விற்காக சாலையில் வரையப்பட்ட ஓவியம்!

By

Published : Apr 10, 2020, 10:34 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதனடிப்படையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலைகளில் கிருமி நாசினி தெளிப்பது, கைகளை சோப்புகளால் அவ்வப்போது சுத்தம் செய்வது என மக்களிடையே விழிப்புணர்வ ஏற்படுத்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகத்துடன் பல தனியார் அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளையும், சிவராம் கலைக்கூடமும் இணைந்து கரோனா வைரஸ் பரவும் சூழலில் மக்கள் சாலைகளுக்கு வர வேண்டாம் என திருநெல்வேலி மாநகர மக்களிடையே மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வண்ணாரப்பேட்டை சாலையில் “விழிப்புணர்வு ஓவியங்கள் “ வரையப்பட்டன.

கரோனா விழிப்புணர்விற்காக சாலையில் வரையப்பட்ட ஓவியம்!

விழிப்புணர்வு ஓவியம் வரையும் பணியை நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையர் சரவணன், உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இதையும் படிங்க....ஊரடங்கால் பசியில் வாடும் நாடோடி மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details