தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில்வே சார்பில் கரோனா விழிப்புணர்வு - corona awareness

திருநெல்வேலி: கரோனா பெருந்தொற்று தடுப்பு குறித்து ரயில்வே சார்பில் இன்று (அக்.,18) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கரோனா விழிப்புணர்வு
கரோனா விழிப்புணர்வு

By

Published : Oct 18, 2020, 1:41 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

அதன்படி, நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று (அக்.,18) மத்திய ரயில் பாதுகாப்புப் படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பயணிகளுக்கு மேளம் சத்தத்தோடு கரோனா குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கரோனா விழிப்புணர்வு

கரோனா விதிமுறைகள் குறித்தும், கரோனாவில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு விழிப்புணர்வு குறிப்புகள் அடங்கிய துண்டறிக்கைகளும் பயணிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே காவல் துறை ஆய்வாளர் கிரண் உள்ளிட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details