தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் விதியை மீறினாரா நயினார் நாகேந்திரன்? - நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மாநிலம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், திருநெல்வேலியில் தனது வாக்கைச் செலுத்திய நெல்லை சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தான் யாருக்கு வாக்களித்தேன் என்று கூறியதால் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகப் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் விதியை மீறினாரா பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ?  யாருக்கு வாக்களித்தேன் என்பதை பொது இடத்தில் தெரிவித்ததால் பரபரப்பு
தேர்தல் விதியை மீறினாரா பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ? யாருக்கு வாக்களித்தேன் என்பதை பொது இடத்தில் தெரிவித்ததால் பரபரப்பு

By

Published : Feb 19, 2022, 3:04 PM IST

நெல்லை:பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மாநகராட்சியின் 39ஆவது வார்டுக்குள்பட்ட ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.

ஆளும் கட்சியின் பணப்பட்டுவாடா

வாக்களித்த பின் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளரைச் சந்தித்தார். அப்போது அவர், ”தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சித் தரப்பில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களை நம்பி நாங்கள் (பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள்) களத்தில் நிற்கிறோம்.

தேர்தல் விதியை மீறினாரா பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்?

அதிமுக பணம் கொடுத்ததாகச் செய்தி வரவில்லை. தனித்து களம் காணும் நாங்கள் வெற்றிபெறுவோம் என நம்புகிறேன். நான் இந்த வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளருக்கு எனது வாக்கினைச் செலுத்தியிருக்கிறேன். காலையிலிருந்து தற்போதுவரை அமைதியாகத் தேர்தல் நடைபெறுகிறது.

போகப்போகத்தான் எவ்வாறு நடைபெறும் என்பது தெரியவரும்” எனத் தெரிவித்தார். இப்படி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளியில் தெரிவிக்கக் கூடாது எனத் தேர்தல் விதிமுறைகள் இருக்கும் நிலையில், தான் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தேன் என நயினார் நாகேந்திரன் பேட்டியில் வெளிப்படையாகக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக முகவர் வெளியேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details