வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்துவருகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் இன்று காங்கிரஸார் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொக்கிரகுளம்-வண்ணாரப்பேட்டை சாலையில் அமைந்துள்ள ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று நடத்தினர். மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவது குறிக்கும் வகையில், ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் நுழைவு வாயிலில் இருந்த இரும்பு கேட்டிற்கு பூட்டு போட்டனர்.