திருநெல்வேலி: மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் திமுக 44 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மாநகராட்சியைக் கைப்பற்ற உள்ளது.
இந்நிலையில் திமுக கட்சியைச் சேர்ந்த பணம் படைத்த பலர், மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
மேயர் பதவியைப் பிடிக்க திமுகவினரிடையே போட்டி மேயர் பதவிக்கான கடும்போட்டி
இந்நிலையில் மேயர் பதவி போட்டி காரணமாக, நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான அப்துல் வகாப் அக்கட்சியின் 38 கவுன்சிலர்களை கன்னியாகுமரி, கேரள எல்லையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவுன்சிலர்கள் கடத்தல்?
சொகுசு விடுதியில் உள்ள கவுன்சிலர்கள் மார்ச் 2ஆம் தேதி பதவி ஏற்று விட்டு, மீண்டும் அங்கேயே அழைத்துச் செல்லப்படுகின்றனர். தொடர்ந்து, மார்ச் 4 ஆம் தேதி 38 கவுன்சிலர்களும் மேயர் பதவி மறைமுகத் தேர்தலில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:வேண்டுமென்றே பொய் வழக்கு: ஜெயக்குமாரின் மகன் குற்றச்சாட்டு