தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனோவால் உயிரிழந்த காவல் ஆய்வாளருக்கு ஆணையர் அஞ்சலி! - Nellai Police Commissioner Deepak Tamar

திருநெல்வேலியில் கரோனோவுக்கு உயிரிழந்த ஆயுதப்படை காவல் ஆய்வாளருக்கு மாநகர காவல் ஆணையர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காவல் ஆய்வாளருக்கு ஆணையர் அஞ்சலி
காவல் ஆய்வாளருக்கு ஆணையர் அஞ்சலி

By

Published : Jul 13, 2020, 1:17 PM IST

தமிழ்நாட்டில் காவல்துறையில் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பாக சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் சமீபத்தில் உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் காவலர்களுக்கு கரோனோ விழிப்புணர்வு குறித்து பல்வேறு பயிற்சிகள், தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டது. இருப்பினும் களத்தில் நின்று பணியாற்றுவதால் காவலர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சாது சிதம்பரம் என்பவர் கடந்த சனிக்கிழமை அன்று கரோனோ பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த காவல் ஆய்வாளர் சாது சிதம்பரத்துக்கு நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று (ஜூலை13) மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், சாது சிதம்பரத்தின் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து பல்வேறு காவல் அதிகாரிகள், காவலர்கள் சாது சிதம்பரத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

ஏற்கனவே மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் கரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காவல் துறையினருக்கு மனநலப் பயிற்சி: எஸ்பி சக்தி கணேஷ் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details