திருநெல்வேலி:முக்கூடலில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பிரசித்திபெற்ற முத்துமாலை அம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. மேலும் இக்கோயிலில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனித்திருவிழாவின் போது ஒருநாள் கலை நிகழ்ச்சி, பிரபல நடிகர் ராஜேந்திரநாத்தால் நடத்தப்பட்டது. அப்போது கலை நிகழ்ச்சியை அரசியல் மேடையாக மாற்றியதாக கூறி இப்பகுதியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அப்போது நடிகர் ராஜேந்திரநாத்திற்கு முதல் மரியாதை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து நடிகர் ராஜேந்திரநாத் கோயிலில் உண்டியல் மேல் உண்டியல் வைத்து வசூல் செய்தல், அர்ச்சனை சீட்டு என பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக இப்பகுதியை சேர்ந்தவர்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடர்ந்தார்.
இந்த நிலையில் நடிகர் ராஜேந்திரநாத் முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயிலுக்கு இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அங்கு வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அப்பகுதி இளைஞர்களிடம் அனுமதி பெற்று இந்த பணியை மேற்கொள்கிறீர்களா, எனக்கூறி தனது செல்போனில் கோயிலை சுற்றி வீடியோ எடுத்தவாறே சென்றார். அப்போது அவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.