இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்கு சாவடி அமைக்கப்பட உள்ளது.
அதற்கேற்ப 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஏற்கனவே உள்ள 1475 வாக்கு சாவடிகளில் கூடுதல் 536 வாக்கு சாவடிகள் என மொத்தமாக 2011 வாக்குச்சாவடிகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படுவதால் வாக்குப்பதிவு இயந்திரங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.