இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், "நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத்தை முன்னிட்டும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகளவிலான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் கூடுவது வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் (ஆகஸ்ட் 1) ஒன்பதாம் தேதி வரை மேற்கண்ட கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தவும், படித்துறைகளில் திதி தர்ப்பணம், பிற சடங்குகள் செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.