தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை கார் வெடிப்பு சம்பவம்: நெல்லையில் இஸ்லாமிய மதகுருவிடம் விசாரணை - கோவை கார் வெடிப்பு சம்பவம்

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தில் இஸ்லாமிய மதகுருவிடம் காவல்துறையினர் மூன்று மணி நேரமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்லாமிய மத குருவிடம் விசாரணை
இஸ்லாமிய மத குருவிடம் விசாரணை

By

Published : Oct 27, 2022, 10:23 PM IST

திருநெல்வேலி: கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் என்ற நபர் உயிரிழந்த நிலையில் இதுவரை ஆறு பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் வீட்டில் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. டிஜிபி சைலேந்திர பாபு உள்பட காவல் உயர் அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இன்று இஸ்லாமிய பிரச்சார இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரிடம் நெல்லை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இஸ்லாமிய மத குருவிடம் விசாரணை

அதை தொடர்ந்து தற்போது நெல்லை மாநகரம் மேலப்பாளையம் ஏகே கார்டன் பகுதியில் வசித்து வரும் முகமது உசேன் மண்பை என்பவரிடம் ஆய்வாளர் ரவீந்திரன் ஜேம்சன் ஜெபராஜ் ஆகியோர் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஒட்டி அந்த பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகமது உசேன் மண்பை ஏற்கனவே கோயம்புத்தூரில் மத குருவாக இருந்துள்ளார். தற்போதும் அவர் இஸ்லாமிய பிரச்சார இயக்கத்தில் நிர்வாகியாக இருந்து வருகிறார். மேலும் மேலப்பாளையத்தில் இருந்தபடி தற்போது அவர் டிராவல்ஸ் ஏஜென்சி மற்றும் கேட்டரிங் தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் முகமது உசேன் மன்பே வெளிநாடுகளுக்கு சென்று வந்ததாகவும் தெரிகிறது.

எனவே கோயமுத்தூரில் ஜமேஷா முபீனின் கூட்டாளிகளிடம் நடைபெற்ற விசாரணையில் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் முகமது உசேன் மண்பேயிடம் போலீசார் கடந்த மூன்று மணி நேரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணை குறித்து நெல்லை மாநகர காவல் துணையாளர் அணிதா மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து முகமது உசேன் மண்பே வீட்டில் போலீசார் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: டெண்டர் ஒதுக்கீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை - முன்னாள் அமைச்சர் வேலுமணி

ABOUT THE AUTHOR

...view details