திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றில் உள்ள ஏழு கால்வாய்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
நான்கு கால்வாய்களின் கீழ் உள்ள பயிர்களைக் காக்கவும், குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு
நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, 1693.44 மி.கனஅடிக்கு மிகாமல் நீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.