தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மை இந்தியா திட்டம் - இரண்டாவது இடத்தில் திருநெல்வேலி - தூய்மை இந்தியா திட்டம்

திருநெல்வேலி :மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் திருநெல்வேலி மாநகராட்சி தரவரிசையில் இரண்டாவது இடம் பிடித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tirunelveli Latest News
Tirunelveli Latest News

By

Published : Aug 20, 2020, 10:48 PM IST

இதுகுறித்து இன்று (ஆக.20) அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மகாத்மா காந்தியின் கனவு திட்டமான தூய்மை இந்தியா என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு தூய்மை பாரதம் என்னும் செயல்முறைத் திட்டத்தை நாடு முழுவதும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பொது இடங்கள் என அனைத்து மக்களும் தாமாக முன்வந்து செயல்முறைப்படுத்திட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் நோய்க்கிருமிகள் உருவாகி தாக்காதவாறு பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் தூய்மை இந்தியா திட்டமானது நாடுமுழுவதும் செயல்முறைபடுத்துவதை ஸ்வச் கணக்கெடுப்புகள் 2020-யின் படி மொத்தம் 4 ஆயிரத்து 242 நகரங்கள் அடங்கிய தரவரிசை பட்டியலில் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை கொண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநில அளவில் இரண்டாவது தரவரிசையில் திருநெல்வேலி மாநகராட்சி முன்னேறியுள்ளது.

தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியதற்கான முக்கிய காரணங்களாக மாநகரில் வசிக்கும் பொதுமக்கள், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சமூக சேவகர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு தடுப்பு பணிகள் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் அளித்த ஒத்துழைப்புக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து தேசிய மற்றும் மாநில அளவில் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதற்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details