தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் உதவி ஆய்வாளருக்கு கத்திக் குத்து – ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிய முதலமைச்சர் - பெண் உதவி ஆய்வாளருக்கு கத்தி குத்து

திருநெல்வேலியில் பெண் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்ணிற்கு ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

பெண் உதவி ஆய்வாளருக்கு கத்தி குத்து
பெண் உதவி ஆய்வாளருக்கு கத்தி குத்து

By

Published : Apr 23, 2022, 3:33 PM IST

திருநெல்வேலி: சுத்தமல்லி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் மார்க்ரெட் திரேசா. இவர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஆறுமுகம் என்பவர் முன்விரோதம் காரணமாக உதவி ஆய்வாளரைக் கத்தியால் வெட்டியுள்ளார்.

இதையடுத்து, அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைத் தாக்கிய ஆறுமுகம் என்பவர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண் காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட செய்தியை அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இச்சம்பவத்தில் காயமுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் மார்க்ரெட் திரேசா அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

அதோடு மட்டுமல்லாமல், மார்க்ரெட் திரேசாவுக்கு உயர்தர சிகிச்சையளிக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நெல்லை அருகே பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

ABOUT THE AUTHOR

...view details