நெல்லை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் திருநெல்வேலியில் இன்று(ஜன.11) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "ஆளுநரின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும், ஆளுநரை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சி, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நாளை மாலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர், மத்திய அரசின் பிரதிநிதிகளாக நீங்கள் செயல்பட வேண்டும் என்று கூறி இருப்பது சிறுபிள்ளைத்தனமானது. சட்டமன்றத்தில் ஆளுநருக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக மாண்பை காப்பாற்றிய தமிழ்நாடு முதல்வரை எஸ்டிபிகட்சி பாராட்டுகிறது.