திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார் அருகே 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் திறப்பு விழா காணொலி காட்சி மூலம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அஹமத், அம்மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) பத்மா ஆகியோர் காணொலி மூலம் இந்திய புதிய நீதிமன்ற கட்டடத்தைத் திறந்துவைத்தனர்.
திறப்பு விழாவில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர் எனப் பலர் கலந்துகொண்டு மின்விளக்கேற்றி திறப்பு விழாவினைக் கொண்டாடினர்.
அம்பாசமுத்திரத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் திறப்பு முன்பே கட்டி முடிக்கப்பட்ட இந்த புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்துக்கு, நான்கு வருடங்களாகியும் திறப்பு விழா நடத்தப்படாமல் இருந்தது.
இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நேரில் வந்து புதிய நீதிமன்ற கட்டடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நீதிமன்ற வாசலில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அம்பை புறக்காவல் நிலையம் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும், அம்பை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தைத் திறக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது.
இதையும் படிங்க: ’ஆன்லைன் ரம்மி’க்கு விரைவில் தடை! - முதலமைச்சர் உறுதி!