டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ரூபி வாரியர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வுசெய்தது.
அதனைதொடர்ந்து களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கௌசிக் காந்தி, ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்ற வீரர்களும் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் ஹரிஷ் குமார் சிறப்பாக விளையாடி 39 ரன்கள் சேர்த்தார்.