தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வழக்கறிஞர் பிரம்மா மீது அகில இந்திய பார் கவுன்சிலில் புகாரளிப்போம்: விக்கிரமராஜா பேட்டி...!

திருநெல்வேலி: வழக்கறிஞர் என்ற போர்வையில் வழக்கு தொடர்ந்து மிரட்டி பிரம்மா பணம் சம்பாதிக்கிறார் எனவும், அவர் மீது அகில இந்திய பார் கவுன்சிலில் புகாரளிக்க உள்ளதாகவும் வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் விக்கிமராஜா தெரிவித்துள்ளார்.

chamber-of-commerce-president-vikiramaraja-commenst-about-the-hotel-issue
chamber-of-commerce-president-vikiramaraja-commenst-about-the-hotel-issue

By

Published : Oct 26, 2020, 5:37 AM IST

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பிரம்மா. கடந்த சில தினங்களுக்கு முன்பு முருகன்குறிச்சி பகுதியில் உள்ள ஸ்ரீமதுரம் தனியார் ஹோட்டலில் வைத்து, ஹோட்டல் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஹோட்டல் நிர்வாகிகள் மற்றும் சூப்பர்வைசர்கள் ஐந்து பேரை பாளையங்கோட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.

வழக்கறிஞர்கள் தரப்பில், நுகர்வோரின் சேவைக் குறைபாட்டை சுட்டிக்காட்டி வழக்கு தொடர்ந்த காரணத்தால் தான் பிரம்மாவை தாக்கியதாக கூறப்பட்டது. அதே சமயம் ஹோட்டல் நிர்வாகிகள் தரப்பில், தொடர்ந்து தேவையில்லாத வழக்குகள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்த காரணத்தாலும், சம்பவம் நடந்த அன்று எங்கள் ஹோட்டலில் பணிபுரிந்த ஊழியரை சாதி பெயரை சொல்லி திட்டியதால் தான் தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பாளையங்கோட்டை காவலர்கள் இன்று வழக்கறிஞர் பிரம்மா மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், ''நெல்லையில் மதுரம் ஹோட்டலில் வழக்கறிஞர் என்ற போர்வையில் பிரம்மா என்பவர் தனது ஆட்களை ஏற்கனவே ஹோட்டலுக்கு அனுப்பி வைத்து, பின்னர் அவரும் சென்று அங்கு பிரச்னை செய்கிறார். இதை அவரது ஆட்கள் வீடியோ பதிவு செய்கின்றனர். வழக்கறிஞர் பிரம்மா தொடர்ந்து இதே போல் தான் நடந்து கொள்கிறார். குறிப்பிட்ட மதுரம் ஹோட்டல் மீது மட்டும் 192 வழக்குகள் பதிவு செய்துள்ளார். இந்த வழக்குகளை திரும்பப் பெற ஒரு வழக்கிற்கு 15,000 ரூபாய் வரை பேரம் பேசியுள்ளார். மொத்தமாக அனைத்து வழக்குகளை திரும்பப் பெற 14 லட்சம் ரூபாய் வரை பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

விக்கிரமராஜா பேட்டி

இவர் ஒரு தவறான வழக்கறிஞர் என்பதற்கு எங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. எனவே அவர் மீது அகில இந்திய பார் கவுன்சில் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளோம். அவரை உடனே வழக்கறிஞர் பணியில் இருந்து நீக்க வேண்டும். இதுதொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் எங்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். தேவைப்பட்டால் அடுத்த கட்டப் போராட்டம் நடந்துவது குறித்து அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். பிரம்மா மறைமுகமாகத் தனது உறவினர்கள் மற்றும் ஜூனியர் வழக்கறிஞர்கள் மூலம் இது போன்று பல்வேறு நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்து பணம் சம்பாதித்து வருகிறார். அவர் சட்டத்திற்குப் புறம்பாக தான் வழக்கறிஞர் பணியிலேயே சேர்ந்துள்ளார்'' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:நம்ம சிம்புவா இது... புதிய புகைப்படத்தைப் பார்த்து வியக்கும் ரசிகர்கள்...!

ABOUT THE AUTHOR

...view details