தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகனத்துக்கு தவணை கட்ட பெண் போலீசிடம் நகை பறித்த இருவர் கைது! - women cbcid police

திருநெல்வேலி: வாகனத்துக்கு தவணைப் பணம் கட்டுவதற்காக, பெண் சிபிசிஐடி காவலரிடம் நகை பறித்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது
கைது

By

Published : Jan 20, 2021, 10:35 AM IST

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்ப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர், நெல்லை மாவட்ட சிபிசிஐடி காவல் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி வழக்கம்போல் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார்.

அப்போது, இவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள், மகலட்சுமி அணிந்திருந்த 10 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து மகாலட்சுமி, பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில், என்ஜிஓ காலனி பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மகாலட்சுமியிடம் நகை பறித்த இளைஞர்களின் வாகனம் அடையாளம் காணப்பட்டது.

அந்த கார் நம்பரை வைத்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி ஜேசுதாசன் (28), சத்யராஜ்(27) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், இருவரும் சேர்ந்து புதிதாக வாகனம் வாங்கிய நிலையில், அதற்கு தவணைப் பணம் கட்ட முடியாமல் திணறினர். எனவே, திருட்டில் ஈடுபட்டு பணத்தை கட்டிவிடலாம் என்று எண்ணிய இளைஞர்கள், பெண் காவல் அலுவலரிடம் நகையை பறித்தது தெரியவந்தது.

ABOUT THE AUTHOR

...view details