தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பரந்தூரில் ஏர்போர்ட் அமைப்பதற்கான இடத்தை மாநில அரசு தான் தேர்வு செய்துகொடுத்தது' - கேந்திர வித்யாலா பள்ளி

'பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை; மாநில அரசு தான் தேர்வு செய்தது. அங்கு நடக்கும் மக்கள் பிரச்னைகளை மாநில அரசுதான் பார்த்துக்கொள்ள வேண்டும்' என மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 27, 2023, 10:55 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

திருநெல்வேலி: மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மாநில அரசும் மாவட்ட நிர்வாகங்களும் இடத்தை தேர்வு செய்து தந்தால் அதற்கான பணிகளைத் தொடங்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் விமான நிலையத்தை திறப்பதற்கான பணிகள் நடைபெறும். சேலம் - சென்னை எட்டு வழிச்சாலையில் பசுமை வழிச்சாலையாக மாற்றும் செய்து திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளில் பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்து கொடுத்தது. அதில் மத்திய அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

மக்களின் போராட்டம் குறித்து மாநில அரசை முடிவு செய்து கொள்ள வேண்டும். நாகர்கோவில் - திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளில் உள்ள பிரச்னைகளை தீர்த்த பின்பு பணிகள் மீண்டும் தொடரும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:களத்தில் மல்யுத்த வீரர் உயிரிழப்பு.. கொலையா..?

ABOUT THE AUTHOR

...view details