தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாளையங்கோட்டை சிறையிலுள்ள கைதியின் அறையில் இருந்த செல்போன் பறிமுதல் - Cell phone seized from prisoner Selvam s cell

பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியின் அறையில் சோதனையிட்டபோது அங்கிருந்த செல்போன், சிம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சோதனையில் செல்போன் பறிமுதல்!
பாளையங்கோட்டை மத்திய சிறையில் சோதனையில் செல்போன் பறிமுதல்!

By

Published : Oct 15, 2022, 10:39 PM IST

திருநெல்வேலி:பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, கடத்தல், வன்கொடுமை, பாலில் பலாத்காரம் உட்பட பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் சுமார் 900 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இங்கு கைதிகளின் நன்னடத்தை குறித்து மாதந்தோறும் சிறை காவலர்கள் ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில் சிறை அலுவலர் வினோத் இன்று(அக்.15) கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்ற சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த செல்வம் என்ற பிரம்மா செல்வம் அறையை சோதனையிட்டபோது அதில் செல்போன் மற்றும் சிம் கார்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிறை நிர்வாகம் சார்பில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தற்போது காவல்துறையினர் பிரம்மா செல்வம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே சிறைகளில் சில காவலர்களின் உதவியோடு கைதிகளுக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சோதனையில் செல்போன் பறிமுதல்!

அதேபோல் கைதிகள் சிறையில் இருந்தபடியே செல்போன் உள்பட சகல வசதியுடன் வாழ்ந்து வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறைத்துறை டிஐஜி பழனி கடந்த 1 ஆம் தேதி பாளையங்கோட்டை சிறையில் ஆய்வு மேற்கண்டோர். எனவே டிஐஜி ஆய்வு மேற்கொண்ட சில நாட்களிலேயே கைதியின் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் - மருத்துவமனையில் சிகிச்சை

ABOUT THE AUTHOR

...view details