திருநெல்வேலி: வண்ணாரப்பேட்டையில் வசந்தம் நகரில் உள்ள ஜாகிர் உசேன் வீட்டில் சிபிஐ அலுவலர்கள் திடீர் சோதனை நடத்திவருகின்றனர். அவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
ஸ்டாண்டர்ட் கேப்ஸ், எண்டர்பிரைசஸ் உரிமையாளரான ஜாகிர் உசேன், அத்துடன் வெளிநாட்டுப் பணம் மாற்றம் (மணி எக்சேஞ்ச்) தொழிலும் செய்துவருகிறார். இவர் வங்கியில் கடன் வாங்கித் தருவதாகப் பண மோடியில் ஈடுபட்டு, கைதான ஹரி நாடாரின் கூட்டாளி என்றும் கூறப்படுகிறது.