தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் உடல் நிலையில் முன்னேற்றம் - nellai Government Hospital

நெல்லை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் உடல் முன்னேற்றம்
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் உடல் முன்னேற்றம்

By

Published : Mar 25, 2020, 7:58 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக அரசு அனைத்து மாவட்ட எல்லைகளையும் முடக்கியுள்ளது. மேலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு இருப்பதால் மக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறது. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் தலைமை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் கரோனா தொற்று அறிகுறியுடன் 13 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், நெல்லை அரசு மருத்துவமனையில் துபாயில் இருந்து வந்த நெல்லை மாவட்டம் திரும்பிய வள்ளியூர் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் உடல் முன்னேற்றம்

வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை மேற்கோள்ளப்பட்டது. ரத்த பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மருத்துவர்கள் தங்கள் இல்லத்திற்கு செல்ல வேண்டாம் - மக்கள் நல்வாழ்வுத் துறை

ABOUT THE AUTHOR

...view details