தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் ஓட்டுநரும் ஆட்டோ ஓட்டுநரும் சாலையின் நடுவே அடிதடி!

திருநெல்வேலி: காரும் ஆட்டோவும் மோதி விபத்து ஏற்பட்ட சூழலில் கார் ஓட்டுநரும் ஆட்டோ ஓட்டுநரும் சாலையின் நடுவே அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடிதடி
அடிதடி

By

Published : Dec 2, 2020, 3:36 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ராம்கோபால், இவரது உறவினர்கள் நான்கு பேர் நேற்று (டிசம்பர் 2) நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி கொண்ட நகரத்திற்கு உறவினர்களைப் பார்ப்பதற்காக காரில் வந்துள்ளனர்.

திருநெல்வேலி டவுண் சந்தி பிள்ளையார் கோயில் அருகில் செல்லும்போது அவ்வழியாக வந்த ஆட்டோவும் காரும் மோதியதாகத் தெரிகிறது. இதில் இரு வாகனங்களுக்கும் லேசான சேதம் ஏற்பட்டது, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அடிதடி

இந்த நிலையில் காரில் இருந்தவர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநரான மாரியப்பனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சேதமடைந்த ஆட்டோவிற்கு இழப்பீடு தருமாறு மாரியப்பன் கேட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு ஆதரவாக மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான சீனிவாசன் காரில் வந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானது. கைகலப்பில் ஈடுபட்ட இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் மாரியப்பன், சீனிவாசன், ராம் கோபால் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். இவர்கள் மூன்று பேரும் சிகிச்சைக்காக அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சந்திப் பிள்ளையார் கோயில் அருகே போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் காவலர் பணியிலிருந்தும் இதனைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இருவரும் மோதிக் கொண்ட காட்சிகளை அப்பகுதியில் கூடியிருந்த மக்கள் காணொலியாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர் இந்தக் காணொலி வைரலாகிவருகிறது. இதன் பிறகே காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:'ஆன்ட்டி' எனக் கூறியதால் அடிதடியில் இறங்கிய 40 வயது பெண்

ABOUT THE AUTHOR

...view details