நெல்லை:தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பேரூராட்சி 9வது வார்டில் திமுகவைச் சேர்ந்த அகமது காதர் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, இன்று(மார்ச்.2) பேரூராட்சி கவுன்சிலராகப் பதவி ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து, வெற்றியைக் கொண்டாடும் வகையில் அகமது காதர் இன்று திமுகவைச் சேர்ந்த தனது நண்பர் ராகவன் பொன் கனகராஜ் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுக்கு நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் வைத்து விருந்து வைத்துள்ளார்.
அங்கு அனைவரும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென அங்கு தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகி வி.பி.ஆர்.விஜயன் தனது ஆதரவாளர்களுடன் சென்று அகமது காதர் தரப்பினருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் வி.பி.ஆர்.விஜயன் தரப்பினர் பிரியாணி தட்டை எடுத்து ராகவன் பொன் கனகராஜ் மீது ஓங்கி அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த ராகவனை, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் படுகாயமடைந்த ராகவனுக்கு, முகத்தில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளது. அதேபோல் அருகிலிருந்த கவுன்சிலர் அகமது காதருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கவுன்சிலர் அகமது காதர் கூறுகையில், ”அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களான விபிஆர்.விஜயனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் ஆதரவாளரான ராகவன் பொன் கனகராஜூக்கும் இடையே நீண்ட நாளாக முன்விரோதம் இருந்து வந்தது.