திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் இந்து தேசிய கட்சி சார்பில் சங்கரநாராயணன் போட்டியிடுகிறார். இதையடுத்து, இன்று அவர் தனது கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ்.எஸ்.எஸ் மணியுடன் கொக்கிரகுளம் சுலோச்சனா முதலியார் பாலம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மூன்று சக்கர மிதி வண்டியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார் .
பின்னர் அவர் நெல்லை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தேசிய கட்சி நிறுவனத்தலைவர் எஸ்.எஸ்.எஸ்.மணி கூறுகையில்,"பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் பாஜக கொள்கையற்ற முறையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதை கண்டித்தும் மூன்று சக்கர மிதி வண்டியில் வந்திருக்கிறோம்.
தமிழ்நாடு அரசு இலவசங்களை அறிவித்து மக்களை நடை பிணமாக்கி விட்டது. தமிழ்நாட்டில் பீடை பிடித்த கட்சிகளை அடித்து விரட்டவே மா இலை வேப்பிலை கட்டியுள்ளோம். பாஜக திராவிடக் கட்சிகளிடம் யாசகம் பெறுவது மிக பெரிய கேவலம். பாஜகவில் இறக்குமதி செய்யப்பட்ட சினிமா நடிகர்களுக்கும் திராவிட கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
மூன்று சக்கர மிதி வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர் உண்மையான தொண்டர்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. முன்னதாக, வித்தியாசமான முறையில் மூன்று சக்கர மிதி வண்டியில் வேட்பாளர் சங்கரநாராயணன் மனுத்தாக்கல் செய்ய வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் சினிமாவில் வரும் "ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது" என்ற பாடலுக்கு ஏற்ப வேட்பாளரின் நடவடிக்கை இருப்பதாக முனுமுனுத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க:'சீட் தராததால் கண்ணீர்விட்ட எம்எல்ஏ - ரங்கசாமி காரின் முன்பு படுத்து தர்ணா'