தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சகோதரியை கொலை செய்துவிட்டு போலீசிடம் சரணடைந்த தம்பி! - தம்பி

நெல்லை: குடும்பத்தகராறு காரணமாக சகோதரியை கொலை செய்துவிட்டு சரணடைந்த சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கொலை

By

Published : Mar 27, 2019, 4:12 PM IST

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி என்னும் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவருக்கும் நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கனிமொழிக்கும் கடந்த சில மாதங்களுக்குமுன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அடிக்கடி தகராறு ஏற்படும்போதெல்லாம்,கனிமொழி வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்றுவிடுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் கனிமொழிக்கு வழக்கம்போல்கணவருடன் தகராறு ஏற்பட்டு தனது பெற்றோர் வீட்டிற்கும் வந்துள்ளார்.

அப்போது, கனிமொழியின் பெற்றோரும், சகோதரர் சுந்திரபாண்டியனும் அவரை கணவருடன் சேர்ந்து வாழும்படி வற்புறுதியுள்ளனர்.

ஆனால் அதற்கு கனிமொழி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சுந்திரபாண்டியன், நேற்று இரவு கனிமொழி தூங்கிக்கொண்டு இருக்கும்பொழுது அவரது கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு நெல்லை டவுன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பாளையங்கோட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details