தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மொட்டை மாடியில் பட்டம் விட்டு விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி பலி! - பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை

திருநெல்வேலி: வீட்டின் மொட்டை மாடியில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

death
death

By

Published : Jun 11, 2021, 10:48 PM IST

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகர் சந்தனமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தர்மபிரபு. இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் மாதவன் (14). தனது வீட்டின் அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாதவன், இன்று (ஜூன்.11) தனது வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது பட்டம் அருகில் இருந்த மரத்தில் சிக்கியதையடுத்து இரும்புக் கம்பியை கொண்டு பட்டத்தை எடுக்க அவர் முயன்றுள்ளார். அப்போது வீட்டின் சுவருக்கும் மரத்திற்கும் இடையே சென்று கொண்டிருந்த மின் வயரில் இரும்பு கம்பி உரசவே கண் இமைக்கும் நேரத்தில் மாதவன் மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மாதவனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

அங்கு மாதவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து மாதவனின் உடல் உடற்கூராய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மரத்தில் சிக்கிய பட்டத்தை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details