தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'2014 ஆம் தேர்தல் அறிக்கையை தான் பாஜக தற்போது வெளியிட்டுள்ளது'-ஜவாஹிருல்லா - dmk allaince

நெல்லை: திமுக வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அயராது பாடுபடுவோம் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா

By

Published : Apr 10, 2019, 10:24 PM IST

நெல்லை மாவட்டம் தென்காசியில் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது,

'2014ல் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சற்று வார்த்தைகளை மாற்றி 2019 ஆம் மக்களவை தேர்தலுக்கு வெளியிட்டுள்ளனர், நடைப்பெற்ற ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை அவர்கள் குறிப்பிடவில்லை. மேலும் பாஜக பரப்புரை வன்முறை தூண்டும் விதமாக இருக்கிறது.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலின் படி திமுக வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அயராது பாடுபடுவோம். மேலும் செய்தியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதை குறித்து கேள்விக்கு? யாராக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

தென்காசி நாடாளுமன்றத் தொகுதி சார்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தென்காசி வேட்பாளர் தனுஷ் குமார் அவர்கள் அமோக வெற்றி பெறுவார்' என அவர் தெரிவித்தார்.

'2014 ஆம் தேர்தல் அறிக்கையை தான் பஜக தற்போது வெளியிட்டுள்ளது'-ஜவாஹிருல்லா

ABOUT THE AUTHOR

...view details