தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எம்பியை கைதுசெய்யக் கோரி தர்ணா; பொன். ராதாகிருஷ்ணன் நள்ளிரவில் கைது! - bjp protest against thirunelveli dmk mp for attack bjp member

பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்பியை கைது செய்யக் கோரி நள்ளிரவு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்பட பாஜகவினர் ஐந்து பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

திருநெல்வேலி செய்திகள்  திமுக  திமுக எம்பி  மக்களவ உறுப்பினர்  பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்பி  பாஜக  போராட்டம்  கொலை முயற்சி  கொலை  attempt murder  dmk  dmk mp  dmk mp attack bjp member  bjp  thirunelveli dmk mp  thirunelveli news  thirunelveli latest news  bjp protest against thirunelveli dmk mp for attack bjp member  பொன் ராதாகிருஷ்ணன்
பொன் ராதாகிருஷ்ணன்

By

Published : Oct 10, 2021, 8:20 AM IST

Updated : Oct 10, 2021, 10:45 AM IST

திருநெல்வேலி: வள்ளியூர் அருகே ஆவரைக்குளத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் பாஸ்கரை, திமுக மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், உணவகத்தில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவையும் திமுக மக்களவை உறுப்பினர் எடுத்துச் சென்றதாக தாக்குதலுக்கு உள்ளான பாஜக பிரமுகர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தாக்குதலுக்கு உள்ளான பாஜக பிரமுகர் ஒருவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் நேற்று (அக். 9) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

போராட்டம்

இதையடுத்து, திமுக மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய கோரி, பொன். ராதாகிருஷ்ணன் நள்ளிரவில், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியார் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, திமுக மக்களவை உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறி போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சட்டப்பிரிவு 307ன் கீழ் வழக்குப்பதிவு செய்து ஞானதிரவியத்தை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

திமுக எம்பியை கைது செய்யக் கோரி போராட்டம்

பின்னர் மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் போராட்டத்தை கைவிடாததால் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பாஜகவினர் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வழக்குப்பதிவு

இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ஒரு மக்களவை உறுப்பினர் பாஜக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார், ஆனால் இங்கு என்னை போராடக் கூடாது எனத் தெரிவிக்கின்றனர்.

முதல் தகவல் அறிக்கை (FIR) போடப்பட்டாலும் நாங்கள் கேட்டபடி 307ன் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். ஒரு மக்கள் பிரதிநிதி 30 ஆள்களை அழைத்து சென்று அடிக்கிறார். திருநெல்வேலியில் சாதி ரீதியாக இதுவரை எத்தனை சம்பவம் நடந்துள்ளன.

இந்த விவகாரத்தை அதற்காக மீண்டும் அடிக்கல் நாட்டும் நிகழ்வாகதான் பார்க்கிறேன். இது ஜனநாயக படுகொலை. என்னை கைது செய்தாலும் உண்ணாவிரதம் இருப்பேன்” என்றார்.

இதற்கிடையில், பணகுடி காவல் நிலைத்தில் திமுக மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் அவரது மகன்கள் தினகரன், ராஜா உள்பட 30 பேர் மீது 147, 294 b, 323, 506 (ii) ஆகிய பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: 3,000 கிலோ ஹெராயின்: சென்னையில் 10 மணிநேரமாக தொடரும் என்ஐஏ ரெய்டு

Last Updated : Oct 10, 2021, 10:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details