திருநெல்வேலி மாவட்ட பாஜகவினர் இன்று(நவ.03) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அதையடுத்து அவர்கள், ஆட்சியர் ஷில்பா பிரபாகரை சந்தித்து, 1978ஆம் ஆண்டு அரசாணையின்படி பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கும்படி கோரிக்கை வைத்தனர். அத்துடன் பிரதமர் மோடியின் புகைப்படம் ஒன்றையும் அவரிடம் அளித்தனர்.
'ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி படத்தை வைப்போம்' - Tirunelveli Collector's Office
திருநெல்வேலி: பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்காவிட்டால், தாங்கள் வைப்போம் என பாஜகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி பாஜக
இது குறித்து பாஜகவினர், "அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் புகைப்படத்தை வைக்க வேண்டும் என அரசாணை உள்ளது. அதனடிப்படையில் பிரதமர் புகைப்படத்தை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கும்படி வலியுறுத்தி உள்ளோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே அலுவலத்தில் புகைப்படத்தை வைப்போம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பிகாரின் முன்னேற்றத்துக்கு ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் - பிரதமர் மோடி