தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அந்தப் பதவி 6 மாத காலமாக காலியாகவே இருந்தது. அக்கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள், பாஜக தலைவராக நியமிக்கபடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், இன்று தமிழ்நாடு பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தலைவராக எல். முருகன் நியமனம்: தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்! - tamilnadu bjp head l. murugan
திருநெல்வேலி: தமிழ்நாடு பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
![பாஜக தலைவராக எல். முருகன் நியமனம்: தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்! bjp cadres crack the fires for appointed new tamilnadu head](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6375228-thumbnail-3x2-ja.jpg)
bjp cadres crack the fires for appointed new tamilnadu head
தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
வழக்கறிஞரான இவர் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதையும் படிங்க:பாஜக புதிய தலைவருக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!