திருநெல்வேலி: சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாள் விழா இன்று (செப்.5) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலி டவுன் சாலையிலுள்ள வ.உ.சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருநெல்வேலி சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் மணிமண்டபத்திலுள்ள மரச்செக்கு, வ.உ.சி புகைப்படங்களை அண்ணாமலை பார்வையிட்டார்.
பாஜக சார்பில் 1 லட்சம் சிலைகள்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " மகாராஷ்டிரா, புதுச்சேரி மாநிலத்தைப் போல் தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி விழா கட்டுபாடுகளுடன் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக முறையில் தமிழ்நாடு அரசின் முடிவை ஏற்று கொள்ள முடியாது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதிக்காவிட்டால் பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் வீடுகள் முன்பாக வைத்து தனி மனித உரிமையுடன் வழிபடுவோம். இதனை தடுக்க முடியாது" என்றார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் உடல்நிலை - சத்ரியன் படம் பார்த்த கேப்டன்