இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ அப்பாவு திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒவ்வொரு குடும்ப அட்டையிலும் நான்கு முதல் ஐந்து நபர்கள் இருந்தால் அவர்களுக்கு மத்திய அரசு கூடுதலாக 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்குகிறது. அதேபோன்று மாநில அரசும், அதே அளவு அரிசியை மத்திய அரசிடம் 4.38 பைசாவிற்கு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கியதாக கணக்கு காட்டப்பட்டது.
முதலமைச்சரும், அமைச்சரும் கொள்ளை
ஆனால், அவர்கள் கூறியபடி தமிழ்நாட்டில் எங்கும் கூடுதல் அரிசி மற்றும் கோதுமை மக்களுக்கு வழங்கவில்லை. மத்திய அரசு வழங்கிய அரிசியையும் மாநில அரசு கொள்முதல் செய்த அரிசியையும் அரவை மில்லில் கொடுத்து சுத்தப்படுத்தி 20 கிலோ முதல் 30 கிலோ பொட்டலமிட்டு தமிழ்நாடு முழுவதும் விற்றுவிட்டனர். இதில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளனர்.