திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான பாபாநசம் அணை முழு கொள்ளளவான 143 அடியை எட்டியது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 3ஆயிரம் கன அடி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆற்றில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் தற்போது வெள்ள அபாயம் எதுவும் இல்லை என்றும் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
தாமிரபரணியில் வெள்ள அபாயம் இல்லை
இதுகுறித்து ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பாபநாசம் அணை நிரம்பியதால், இன்று முதல் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை சேர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய சூழல் இல்லை. இது வழக்கமான எச்சரிக்கை தான். அணைக்கு தண்ணீர் வரத்தை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.