திருநெல்வேலி:பேட்டை மயிலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (எ) கருத்தப்பாண்டி(54). இவர் கொண்டாநகரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் பார் எடுத்து நடத்தி வருகிறார். அங்கு அவர் கோழி, ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இதனால் இரவில் அந்த பாரிலேயே தங்கியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிப் போனதை குறித்து கணேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இன்று (மே.12) காலை 7 மணிக்கு பாருக்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தூங்கிக்கொண்டிருந்த வரை எழுப்பி அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த சுத்தமல்லி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலைக் கைப்பற்றி உடற்கூராவிற்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆடு திருடப்பட்டதாக புகார் கொடுத்ததில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு எதுவும் காரணம் உண்டா என சுத்தமல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'கில்லி' நடிகரின் உயிரைப் பறித்த கரோனா!