தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில், அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. சில இடங்களில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம். கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றால அருவியில் ஐயப்ப பக்தர்கள் குளிக்கத் தடை! - ஐயப்ப பக்தர்கள்
தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ban-to-enter-in-courtallam-falls-due-to-water-overflow
இதனைத்தொடர்ந்து குற்றாலம் பேரருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க குற்றாலம் காவல்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் தடைநீக்கம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மழையால் தேங்கிய நீரில் மூழ்கிய 2000 வீடுகள்!