நெல்லை:உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஈகை திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளாக இருந்து வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தி வழிபட்டனர்.
கரோனோ ஊரடங்கு காரணமாக பொது மைதானங்களில் தொழுகை நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை இதையடுத்து நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.