நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே குளத்தின் கரையில் உள்ள முட்புதரின் நடுவே, பிறந்து சில மணி நேரங்களே ஆன அழகிய பெண் குழந்தை ஒன்றை யாரோ ஒருவர் வீசிச்சென்றுள்ளார். அந்த வழியாகச் சென்ற அப்பகுதி மக்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து, காவல் நிலையத்திற்கு தகவலும் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை..! - பச்சிளம் குழந்தை
நெல்லை: சீவலப்பேரி அருகே உள்ள முட்புதரில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
infant baby
குழந்தை தற்போது நலமாக இருப்பதாகவும், குழந்தையை பரிசோதித்த பின்னர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், குழந்தையின் பெற்றோர் யார், எதற்காக குழந்தையை குளத்தின் அருகே வீசிச் சென்றனர் என சீவலப்பேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.