தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டாம் நிலை பெண் காவலர்கள் பணியில் நியமனம்!

நெல்லை: நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 173 இரண்டாம் நிலை பெண் காவலர்கள் இன்று பணியில் சேர்ந்தனர்.

இரண்டாம் நிலை பெண் காவலர்கள் பணியில் நியமம்
இரண்டாம் நிலை பெண் காவலர்கள் பணியில் நியமம்

By

Published : May 3, 2020, 3:06 PM IST

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2019ஆம் ஆண்டு நடத்திய இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று அடிப்படை பயிற்சிக்கு தகுதி பெற்ற நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பெண் காவலர்களுக்கு, இன்று நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் அனைத்து அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பயிற்சிகள் தொடங்கும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் 165 பேரும், நெல்லை மாநகரத்திற்கு எட்டு பேர் ஆக மொத்தம் 173 பேர் இன்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பணியில் சேர்ந்தனர்.

இரண்டாம் நிலை பெண் காவலர்கள் பணியில் நியமனம்

அவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் நுழையும் முன்பு அவர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினிகள் (சானிடைசர்) ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த கையோடு அவர்களுக்கு கரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது.


இதையும் படிங்க:'கும்மியாட்டம் ஆடிய இளைஞர்கள்...' - கரோனா விழிப்புணர்வில் சூலூர் காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details