திருநெல்வேலிபாளையங்கோட்டை அருகில் உள்ள அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 15ஆம் தேதி திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மீதி இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 05) நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நெல்லை சென்றார். முன்னதாக அவர் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.