தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்னும் 10 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி தலைகீழாக மாற்றப்படும்: அண்ணாமலை - Tirunelveli

புதிய கல்விக் கொள்கையை ஆட்சியாளர்கள் எதிர்த்தாலும், இன்னும் 10 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டு, குழந்தைகளின் கல்வி தலைகீழாக மாற்றப்படும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

இன்னும் 10 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி தலைகீழாக மாற்றப்படும்: அண்ணாமலை
இன்னும் 10 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி தலைகீழாக மாற்றப்படும்: அண்ணாமலை

By

Published : Jan 13, 2023, 3:16 PM IST

இன்னும் 10 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி தலைகீழாக மாற்றப்படும்: அண்ணாமலை

திருநெல்வேலி: தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். மேலும் பள்ளியில் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து மேடையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "கல்வித்துறையில் தினம் தினம் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. குழந்தைகளுக்கு பெற்றோர் ஆசிரியராக இருக்க முடியவில்லை என்ற கவலை தனக்கும் உள்ளது. அரசியலில் முழு நேர வேலை இருப்பதால் குழந்தைகளுக்கு ஆசிரியராக இருந்து எதையும் சொல்லிக் கொடுக்க முடியாத நிலை உள்ளது.

புதிய கல்விக் கொள்கையால் கல்வி தலைகீழாக மாறும். குழந்தைகளின் திறமைகளை அழிக்கும் ஆங்கிலேயர் கொண்டு வந்த மெக்காலே கல்விக் கொள்கையை ஒழித்து, புதிய கல்விக் கொள்கையை மோடி கொண்டு வந்தார். மதிப்பெண்களில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. ஆட்சியாளர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தாலும் அது கொண்டுவரப்பட்டு இன்னும் 10 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி தலைகீழாக மாற்றப்படும்.

நடிகராக வரவேண்டும் என்றால், புதிய கல்விக்கொள்கையை பின்பற்றினால் அவரின் தனித்திறமையினை முக்கியத்துவம் கொடுத்து நடிகராக்க முடியும், இசையில் ஆர்வம் இருந்தால் புதிய கல்விக்கொள்கையால் இசைஞானி ஆகலாம். மதிப்பெண் என்ற நிலையில் இருந்து மாணவர்கள் விடுபடுவார்கள் என்பது தான் புது கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம்.

நல்ல குடிமகனாக வர வேண்டும் என்பதற்காகவே புதிய கல்விக்கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது. விஐபி கலாசாரம் என்பதே பள்ளியில் இருந்து தான் வருகிறது. அதை அனைத்துப் பள்ளிகளிலும் உடைத்து மாணவர்களை நல்ல மனிதர்களாக, குடிமகன்களாக, குழந்தைகளை மாற்றுவது என்பது எளிதான காரியம் இல்லை. அதை ஆசிரியர்கள் சரியாக செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: "ஆளுநருக்கு அறிவுரை கூறுங்கள்" குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details