தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராவண கோட்டம் திரைப்படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு... திரையரங்கை முற்றுகையிடப் போவதாக அறிவிப்பு

திருநெல்வேலியில் ராவண கோட்டம் படத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து தியேட்டரை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

ராவண கோட்டம் திரைப்படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு..திரையரங்கை முற்றுகையிடப் போவதாக அறிவிப்பு
ராவண கோட்டம் திரைப்படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு..திரையரங்கை முற்றுகையிடப் போவதாக அறிவிப்பு

By

Published : May 11, 2023, 11:08 PM IST

திருநெல்வேலி: நடிகர் சாந்தனு பாக்யராஜ், நடிகை ஆனந்தி நடித்துள்ள ராவணக் கோட்டம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்த நிலையில் இராவணக்கோட்டம் திரைப்படத்தில் மறைந்த முதலமைச்சர் காமராஜர் பற்றி தவறான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக நாடார் சமுதாய அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ராவணக் கோட்டம் திரைப்படத்தை வெளியிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என தென் மாவட்ட நாடார் கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் அச்சுதானந்த நாடார் இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”ராவணக் கோட்டம் திரைப்படத்தில் காமராஜர் பற்றியும், நாடார் சமுதாயம் பற்றியும் இழிவாகப் பேசி உள்ளனர்.

காமராஜர் ஆட்சியில் தான் கருவேல மரங்களை விதைத்ததாக கூறியுள்ளனர். ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலேயர்கள் தான் கருவேலம் மரங்களைக் கொண்டு வந்தனர். அப்போது சிலிண்டர் அடுப்புகள் இல்லாததால் விறகுகளை எரிப்பதற்காக ஆங்கிலேயர்கள் கருவேலை மரங்களை விதைத்தனர். ஆனால் காமராஜர் தான் கருவேல மரங்களை விதைத்தார் என்று சொல்வது மிக கீழ்த்தரமான செயல்.

எனவே, ராவண கோட்டம் திரைப்படம் வெளி வந்தால் நாடார் சமுதாயம் சார்பில் அனைத்து மக்களும் திரண்டு திரையரங்கை முற்றுகையிடுவோம். எதற்கெடுத்தாலும் நாடார் சமுதாயத்தை குறை கூறுகின்றனர். ராவண கோட்டம் திரைப்படத்தை வெளியிட விட மாட்டோம்’’ என்று தெரிவித்தார். பேட்டியின் போது சிங்கை முருகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:பழைய பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் ரூ.1 ஊக்கத்தொகை - நெல்லை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details